திரையுலகமே அதிர்ச்சி… பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்!

திரையுலகமே அதிர்ச்சி… பழம்பெரும் நடிகர் திடீர் மரணம்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்த ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நெருங்கிய நண்பரான இவர், திரையுலகில் நுழையும் முன் அமெரிக்கத் தூதரகத்தில் பணி செய்து வந்தார்.

Srikanth

இவர் நிறைய படங்களில் சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்ற நடிகர்களோடு துணைப் பாத்திரங்களில் நடித்தார். பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்களோடு எதிர்நாயகனாகத் தோன்றினார். ரஜினி கதாநாயகனாக நடித்த முதல் படமான பைரவியில் முதன்மை எதிர்நாயகனாக நடித்தது இவரேயாவார். இவர் கதைநாயகனாக நடித்து 1974 இல் வெளிவந்த திக்கற்ற பார்வதி திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றது.

தற்போது 82 வயதான தங்கப்பதக்கம் ஸ்ரீகாந்த் காலமாகி விட்டதாகவும், கொரோனா தொற்றுக்கும் அரசின் கட்டுப்பாட்டுக்கும் அஞ்சி உடல் தகனம் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றால் பழம் நடிகர் பலியான சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *