இது நம்ம சர்கார்… தளபதியின் அரசியல் ரூட்டுக்கு அஸ்திவாரமா இது?

இது நம்ம சர்கார்… தளபதியின் அரசியல் ரூட்டுக்கு அஸ்திவாரமா இது?

ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 52 பேர் வெற்றி பெற்றிருப்பது விஜய் ரசிகர்களிடையே அரசியல் எண்ட்ரி குறித்த புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி உள்பட புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இருகட்டங்களாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் மூலம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், கிராம ஊராட்சி தலைவர் பதவிகள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் நிரப்பப்படுகின்றன. இதற்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் நேற்று காலை எட்டு மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக வாக்கு எண்ணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

9 மாவட்டங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ஆளும் திமுகவே முன்னிலைப் பெற்றுள்ளது. எதிர்கட்சியான அதிமுக ஒரு சில இடங்களையே கைப்பற்றியுள்ளது. அதிலும், பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் சொற்ப வாக்குகளை மட்டுமே பெற்று முன்னிலை பெற முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன. பாஜகவின் ஒரு வேட்பாளர் ஒரே ஒரு வாக்கினை பெற்றது வைரலானது.

இந்த சூழலில், உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் வெற்றிகளை குவித்திருப்பது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டனர். அவர்களில் இதுவரை 52 பேர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி தொடங்குவதில் தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கும், தளபதி விஜய்க்கும் மோதல் இருந்து வரும் சூழ்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினரின் உள்ளாட்சி தேர்தலில் பெற்ற இந்த வெற்றி பெரும் அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த வெற்றியை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *