பண்டிகை தினங்களில் திறக்கப்படுமா கோவில்கள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

பண்டிகை தினங்களில் திறக்கப்படுமா கோவில்கள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்படுவது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற இருக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், மருத்துவத்துறை செயலர் மற்றும் துறை ரீதியான அதிகாரிகள் கலந்து கொள்வர்.

மேலும், பண்டிகை நாட்களான விஜயதசமி, சரஸ்வதி பூஜை அன்று கோவில்களை திறப்பது குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்து அரசே முடிவு எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதை தொடர்ந்து மருத்துவர் குழுவுடன் இன்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *