தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யின் 28 ஆண்டுகால திரையுலக பயணத்தை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவராக இருக்கிறார் தளபதி விஜய். 1994ம் ஆண்டு டிசம்பர் 4 அன்று இவர் நடித்த ‘நாளைய தீர்ப்பு’ படம் வெளியானது.
இன்றோடு அவர் திரைத்துறைக்கு கதாநாயகனாக அறிமுகமாகி 28 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் #28YearsOfBelovedVIJAY என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’, ‘யூத்’, ‘திருமலை’, ‘கில்லி’ என தன்னுடைய ஆரம்பக்கட்ட சினிமா வாழ்க்கையில் இருந்து தனது ரசிகர்களுக்கான படமாகவும் தேர்ந்தெடுத்து ‘மாஸ்டர்’ராக நிற்கிறார் விஜய்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அவரது படங்களுக்கென தனி வியாபாரமும் ரசிகர்களும் இருக்க்றார்கள் என்பது நிதர்சனம்.
READ ALSO- நயன்தாரா படத்தில் இருந்து விலகினாரா சமந்தா?
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் அவரது படங்களுக்கென தனி வியாபாரமும் ரசிகர்களும் இருக்க்றார்கள் என்பது நிதர்சனம்.
கோவிட் லாக்டவுணால் குறைவாக வரும் ரசிகர்களை மீண்டும் தியேட்டர்களுக்குள் இழுக்க மீண்டும் ‘மாஸ்டர்’ படமே துவக்க புள்ளியாக இருக்கும் என திரைத்துறை வட்டாரம் கணக்கிட்டுள்ளதிலேயே அவரது சினிமா வாழ்வின் வெற்றியும் ரசிகர்களின் அன்பும் அடங்கியுள்ளது.
இன்னும் பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் அவரது வெற்றி பயணம் தொடர நமது வாழ்த்துகள்!




