புன்னகை இளவரசி என்று அழைக்கப்படும் நடிகை ஸ்னேகாவுக்கு இன்று பிறந்தநாள். இதைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திராவைச் சேர்ந்த ஸ்னேகா, தமிழில் விரும்புகிறேன் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னதாகவே என்னவளே படம் வெளியாகிவிட்டது. எனவே இந்தப் படம்தான் அவருக்கு அறிமுகப் படம்.
இதைத் தொடர்ந்து, இவர் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து முன்னணி நடிகையானார். மேலும் அவரை புன்னகை இளவரசி என்றும் ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினர். வசீகரா, ஆட்டோகிராப், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பிரமாதமாக இருந்தது.
புகழின் உச்சத்தில் இருந்தபோது நடிகர் பிரசன்னாவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும் இவர் நடித்து வருகிறார். கடைசியாக பட்டாஸ் படத்தில் நடித்தார். இந்நிலையில் இவர் இன்று தனது 39-வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி நடிகர், நடிகைகள், ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது மணிரத்னம் தயாரித்து வரும் அந்தொலஜி திரைப்படமான “நவரசா” மற்றும் துல்கர் சல்மான் நடிக்கும் “வான்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஸ்னேகா.




