’விருமன்’ படத்தின் ஆடியோ லாஞ்ச்

’விருமன்’ படத்தின் ஆடியோ லாஞ்ச்

விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Image

முத்தையா இயக்கத்தில் கார்த்தி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து நடித்துள்ள படம் விருமன். இப்படத்தில், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும், சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விருமன் படத்தை சூர்யா,ஜோதிகாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் இடம்பெற்ற கஞ்சாப்பூ கண்ணாலே பாடல் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரைப் பகுதியில் நடைபெற்றது. இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்டு 3ம் தேதி மதுரையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்டு 11ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

-பா.ஈ.பரசுராமன்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *