இயக்குநர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரப்படுத்தவுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். 1993ல் வெளியான ஜெண்டில்மேன் திரைப்படத்தின் மூலம் தனக்கென தனிமுத்திரையை பதித்தவர். (தனது படைப்பின் மூலம் அரசு எந்திரங்களை ஆட்டிப்படைத்தவர்)பிறகு காதலன், இந்தியன், ஜீன்ஸ்,முதல்வன், சிவாஜி என பல வெற்றிப்படங்களை இயக்கி தமிழ் திரையுலகின் பிரமாண்ட இயக்குநராக வலம் வருகிறார். தற்போது இந்தியன் 2 படம் எடுத்து வருகிறார். இவரின் மகள் அதிதி நடித்த விருமன் திரைப்படம் ஆகஸ்டு 12ல் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளராகவும் பல படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில், இளைய தலைமுறையினருக்கும் நாளைய படைப்பாளிகளுக்கும் முன்மாதிரியாக இருக்கும் அவருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி மகிழ்வதில் பெருமிதம் கொள்கிறது என தெரிவித்துள்ளது. முன்னதாக, வேல்ஸ் பல்கலைக்கழகம் சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
-பா.ஈ.பரசுராமன்