டான் திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இப்படத்தை இயக்குகிறார். இதில் கதாநாயகியாக ரியா போஷாப்காவும், முதன்மை கதாபாத்திரத்தில் சத்யராஜூம் நடித்துள்ளனர். இதை தொடர்ந்து மண்டேலா படத்தின் இயக்குநர் அஸ்வின் இயக்கும் புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இந்த படத்திற்கு மாவீரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாவீரன் படத்தின் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தில் நடிகை சரிதா, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நடிக்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அதிதி ஷங்கர் நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்டு 12ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.