நடிகை மீராமிதுனுக்கு மீண்டும் பிடிவாரண்ட் நீதிமன்றம் உத்தரவு

நடிகை மீராமிதுனுக்கு மீண்டும் பிடிவாரண்ட் நீதிமன்றம் உத்தரவு

பட்டியலினத்தவர் மீது அவதூறு கருத்துகளை பதிவிட்ட நடிகை மீராமிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடிவராண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜர்...ஆக 27 வரை நீதிமன்ற காவல்.... | Meera  Mithun appears in court ...Judicial custody till Aug 27 .... - Tamil  Oneindia

திரைப்படத்துறையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்த நடிகை மீராமிதுன் மற்றும் அவரது நண்பர் ஷியாம் அபிஷேக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு பின் ஜாமினில் வெளிவந்தனர்.இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது அபிஷேக்கும் அவரது வழக்கறிஞரும் ஆஜாரான நிலையில் மீராமிதுனும் அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.இதையடுத்து சாட்சி விசாரணையன்று குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது வழக்கறிஞர் யாரும் ஆஜராகாதது நீதிமன்றத்தை ஏமாற்றுவதாக உள்ளது என தெரிவித்த நீதிமன்றம், நடிகை மீராமிதுனுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்டு 29ம் தேதிக்கு தள்ளிவைத்தது. மீராமிதுனுக்கு இரண்டாவது முறையாக நீதிமன்றம் பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *