‘தகைசால் தமிழர் விருது’ ஆர்.நல்லக்கண்ணு பெறுகிறார்.

‘தகைசால் தமிழர் விருது’ ஆர்.நல்லக்கண்ணு பெறுகிறார்.

தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இரா. நல்லகண்ணு - தமிழ் விக்கிப்பீடியா

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசார் தமிழர் என்ற பெயரில் புதிய விருது 2021ம் ஆண்டுமுதல் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு விடுதலை போராட்ட வீரராக தன் இளம் வயதை சிறைச்சாலையிலும், தலைமறைவு வாழ்க்கையிலும் கழித்தவர். ஏழை,எளிய மக்களுக்காக குரல்கொடுத்து சமூக நல்லிணக்கத்தையும், சுற்றுச்சூழலையும் காத்திட தொடர்ந்து பாடுபட்டு வருவதுடன், சிறந்த தன்னலமற்ற அரசியல்வாதியாகவும் பணியாற்றி, தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை அளித்த தமிழருமான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு 2022-ம் ஆண்டிற்கான ’தகைசால் தமிழர் விருது’ வழங்க தேர்வுக்குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.ஆர்.நல்லக்கண்ணு அவர்களுக்கு ₹10லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் சுதந்திர தினத்தன்று (ஆகஸ்டு 15) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *