நித்யாமேனன் பதிவிட்ட போஸ்டர் வைரல்

நித்யாமேனன் பதிவிட்ட போஸ்டர் வைரல்

யாரடி நீ மோகினி படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன், இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

90’s கிட்ஸ் ஆக வரும் தனுஷ் டெலிவரிபாயாக வேலை செய்கிறார். பள்ளிப்பருவம் முதல் அவரின் தோழியாக வரும் கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். கொஞ்சம் கூட நடிப்பு என்று தெரியாத அளவிற்கு மிகவும் அழகாகவும், தத்ரூபமாகவும் நித்யா நடித்துள்ளார். படத்தில் தோழியாக வரும் அவரின் ஷோபனா கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் அச்சாணி பதித்ததுபோல் நீங்காமல் இடம்பிடித்து விடுகிறது. படத்தில் இடம்பெற்ற தாய்கிளவி பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்.

இந்த நிலையில் திருச்சிற்றம்பலத்தின் கதாநாயகி நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டரில் ஒவ்வொரு ஆணுக்கும் ஷோபனா மாதிரி ஒரு தோழி வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. நீங்கள் இதை ஒப்புக்கொள்கிறீர்கள் தானே? என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *