’பாதிக்கப்பட்டவங்களுக்குமறுக்கப்பட்ட நீதி அவங்களுக்கு நடந்த அநீதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’ தீப்பொறி கிளப்பும் ஜெய் பீம் டீசர்!!

’பாதிக்கப்பட்டவங்களுக்குமறுக்கப்பட்ட நீதி அவங்களுக்கு நடந்த அநீதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’ தீப்பொறி கிளப்பும் ஜெய் பீம் டீசர்!!

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி உள்ளது.

அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ‘கூட்டத்தின் ஒருத்தன்’ இயக்குநர் தா.செ.ஞானவேல் எழுதி இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் ’ஜெய் பீம்’. இந்த திரைப்படத்தை தயாரித்து நடிக்கிறார் சூர்யா. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘கர்ணன்’ பட நாயகி ரஜிஷா விஜயன் நடித்துள்ளனர். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்ke ‘ஜெய் பீம்’ படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

சமீபத்தில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகிறது. இந்த நிலையில், இன்று இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

டீசரில் ’பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி அவங்களுக்கு நடந்த அநீதியை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்’, ‘இந்த சாதில இருக்கவங்க திருட்டு கேஸில் கன்வெர்ட் ஆகுறது ரொம்ப சகஜம் சார்’… ‘திருடன் இல்லாத சாதி இருக்கா நட்ராஜ்’.. உங்க சாதி என் சாதின்னு எல்லா சாதிலும் பெரிய பெரிய திருடர்கள் இருக்காங்க’ போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

மேலும், பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்காக கம்னியூஸ்டுகள் போராடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *