கேரள நடிகை லட்சுமி மேனன் தான் காதல்வயப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழில் சுந்தரபாண்டியன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் லட்சுமி மேனன். இப்படத்தை தொடர்ந்து கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு வெளியான றெக்க படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதன்பின் அவர் தமிழில் நடிக்கவில்லை.
இந்நிலையில் அவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல் வந்தது. ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார்.
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது போட்டோக்களைப் போட்டு வருகிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் நடிகை லட்சுமி மேனன், அண்மையில் ரசிகர்களுடன் சாட்டிங் மூலம் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், நீங்கள் சிங்கிளா? என கேள்வி எழுப்பினார். அதற்கு இல்லை என பதிலளித்த லட்சுமி மேனன், கூடவே இதயத்தின் சிம்பலையும் பதிவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் காதல் வயப்பட்டுள்ளார் என்றும், காதலர் யார் தெரியவில்லை என்றும் மலையாளப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.