வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துள்ள மாநாடு திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இதில் எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்தின் முதல் பாடல் பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில் மாநாடு படத்தின் டிரைலர் வரும் அக்-2 அன்று வெளியாகும் என படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கபட்டிருக்கிறது.
சிம்பு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘மாநாடு’ திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படத்துடன் மோதுவது குறிப்பிடத்தக்கது.