‘திரௌபதி’ புகழ் மோகன் ஜி- யின் அடுத்த திரைப்படத்தில் சிலம்பரசன்?

‘திரௌபதி’ புகழ் மோகன் ஜி- யின் அடுத்த திரைப்படத்தில் சிலம்பரசன்?

சிலம்பரசன் எப்போதும் ஒரு புரியாத புதிர் போன்றவர். அடுத்தடுத்து பல சர்ப்பிரைஸ்களை அளித்து வருகிறார்.

சில வருடங்களுக்கு முன்பு சிம்பு அதிக வெயிட் போட்டு 101 கிலோ உடல் எடையை கொண்டிருந்தார் நடிகர் சிம்பு. அத்தோடு அவரது சேப்டர் க்ளோஸ் என திரையுலகில் சிலர் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் திரைப்படத்திற்காக சிம்பு அவரது உடல் எடையை 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக குறைத்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. சுமார் 30 கிலோ எடையை குறைத்து மிகவும் இளமையாக நல்ல உடல் எடையை கொண்ட சிம்புவை திரையில் பார்த்து அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். அதற்கடுத்து அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட் ஆகி வந்தார்.

இந்நிலையில் தற்போது கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்காக நடிகர் சிம்பு தற்போது மேலும் 15 கிலோ எடையைக் குறைத்துள்ளார்.

அவரது மாநாடு திரைப்படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தொடர்ந்து பத்து தல, கொரோனா குமார் என ஒப்பந்தமாகியுள்ள படங்களின் எண்ணிக்கை நீள்கிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் திரௌபதி ருத்ரதாண்டவம் என அடுத்தடுத்து இரண்டு மிகப்பெரிய ஹிட் திரைப்படங்களை கொடுத்த சர்ச்சை இயக்குனர் மோகன்ஜி அவர்களது இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *