‘மகான்’: விக்ரமுடன் இணைந்து டப்பிங் பேசிய துருவ்!!

‘மகான்’: விக்ரமுடன் இணைந்து டப்பிங் பேசிய துருவ்!!

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரமின் ‘மகான்’ படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் ‘மகான்’ படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். இந்த ஆண்டின் துவக்கத்தில் கொடைக்கானலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங், நேபாள எல்லை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று நிறைவுப்பெற்றது. சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘மகான்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அப்பா மற்றும் மகன் காம்போ என்பதால் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

படம் வரும் பிப்ரவரி மாதத்தில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் டப்பிங் பேசும் புகைப்படத்துடன் உற்சாகமாக பகிர்ந்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *