என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம்” – அஜித்குமார் அறிக்கை

என்னை ‘தல’ என்று அழைக்க வேண்டாம்” – அஜித்குமார் அறிக்கை

“என்னை தல என்றோ வேறு ஏதேனும் பட்டப்பெயர்களை குறிப்பிட்டோ அழைக்க வேண்டாம்” என்று நடிகர் அஜித்குமார் அறிக்கையினை தனது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா வாயிலாக வெளியிட்டுள்ளார்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘வலிமை’ திரைப்படம் வெளியாகிறது. இந்த நிலையில், அஜித் தனது பி.ஆர்.ஓ சுரேஷ் சந்திரா மூலம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பெரும் மரியாதைக்குரிய ஊடக பொதுஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு, இனிவரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித்குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ.கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. ’தல’ என்றோ வேறு ஏதாவது பட்டப் பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்கவேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.

உங்கள் அனைவரின் ஆரோக்கியம் உள்ள உவகை, வெற்றி, மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன். அன்புடன் அஜித்குமார்” என்று தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *