மீண்டும் பிக் பாஸ்-க்கு வரும் உலக நாயகன் கமல்ஹாசன்?!

மீண்டும் பிக் பாஸ்-க்கு வரும் உலக நாயகன் கமல்ஹாசன்?!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் நவம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காணப்பட்ட மிதமான கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது முழுமையாக குணமடைந்த அவரை டிசம்பர் 3ஆம் தேதி வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது அவர் தனது வழக்கமான பணிகளை டிசம்பர் 4-ஆம் தேதி முதல் தொடரலாம் என அவர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் இயக்குனர் சுகாஸ் பிரபாகர் பிரஸ் ரிலீஸ் வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் இந்த வாரத்திற்கான பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. விக்ரம் திரைப்படத்தின் பணிகளும் தொடங்கவுள்ளன.

கடந்த வாரம் நடிகை ரம்யா கிருஷ்ணன், கமல்ஹாசனுக்கு பதிலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *