இன்று மாலை வெளியாகிறது ‘வலிமை’ இரண்டாம் பாடல் ‘ப்ரோமோ’ வீடியோ!!

இன்று மாலை வெளியாகிறது ‘வலிமை’ இரண்டாம் பாடல் ‘ப்ரோமோ’ வீடியோ!!

தல அஜித்குமாரின் ‘வலிமை’ திரைப்படத்திலிருந்து இரண்டாம் பாடல் ப்ரோமோ வீடியோ இன்று மாலை வெளியாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்திருக்கிறார். ‘வலிமை’ பொங்கலையொட்டி வெளியாவதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின், முதல் பாடலான ‘நாங்க வேற மாரி’ பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தது. சமூகத்திற்கு கருத்து சொல்லும் பாடலாகவும் இது அமைந்தது.

இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாடல் ப்ரோமோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவிருக்கிறது என்றும் அதில், பாடல் வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். சோனி மியூசிக்கும் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *