ஆதிபுருஷ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆதிபுருஷ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆதிபுருஷ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.



ராமாயண கதையை மையமாகக் கொண்டு இந்தியாவின் 5 மொழிகளில் ஆதிபுருஷ் திரைப்படம் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சாயிப் அலிகான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை ஓம் ராவத் இயக்குகிறார். கதாநாயகியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார்.

இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *