சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ மறுபடியும் தொடங்கியது!

சாய் பல்லவியின் ‘லவ் ஸ்டோரி’ மறுபடியும் தொடங்கியது!
எப்போதும் மனதில் நிற்கும்படியான வேடங்களில் நடிப்பவர் சாய் பல்லவி. அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட மலர் டீச்சர் முதல், துறு துறுப் பெண்ணாக நடித்த பானுமதி வரை, அனைத்திலுமே அவரது இயல்பான நடிப்பும், அழகிய முக பாவங்களும் நம்மை கவர்ந்திருக்கும்.

அவர் தற்போது ‘லவ் ஸ்டோரி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு, நேற்று மறுபடியும் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தில், சாய் பல்லவிக்கு ஜோடியாக நாக சைதன்யா நடிக்கிறார். இதற்கு முன் சாய் பல்லவியை Fidaa (பானுமதி என்று தமிழில் வெளியானது) என்ற படத்தில் இயக்கிய சேகர் கம்முலா இந்தப் படத்தையும் இயக்குகிறார். வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

ஐதராபாத் -ல் நேற்று 15 பேருடன் தொடங்கிய படப்பிடிப்பு. ஒரே கட்டமாக நிறைவு பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் படம் எப்படி இருக்கிறதென்று !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *