இருபாலின ஈர்ப்புடைய பெண்ணாக சமந்தா! ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்!!

இருபாலின ஈர்ப்புடைய பெண்ணாக சமந்தா! ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார்!!

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். பாலிவுட்டில் தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸ் வாயிலாக அறிமுகமானார். துணிச்சலான நடிப்பினால் பெரிதும் பாராட்டப்பட்டார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா. ஆனால் இம்முறை பிரிட்டிஷ் படத்தில் நடிக்க உள்ளார். உலகப் புகழ் பெற்ற இயக்குனர் பிலிப் ஜான் இயக்கத்தில் தமிழ் பெண்ணாக டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். Bi Sexual ( இரு பாலின ஈர்ப்பாளர்) கதாபாத்திரத்தில் இதில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு அரெண்ஜ்மெண்ட் ஆஃப் லவ் என பெயரிடப்பட்டு

படத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார், அதில் “ஒரு புதிய உலகம்! நான் கடைசியாக 2009 ஆம் ஆண்டு யே மாயா சேசேவுக்காக ஆடிஷன் செய்தேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஆடிஷன் செய்தபோது, ​​நான் அதே பதற்றத்தை உணர்ந்தேன்… BAFTA விருது பெற்ற, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, உங்களுக்கு மிகவும் பிடித்த தொடரான ​​’Downton Abbey’-ன் இயக்குனருக்கான ஆடிஷனில் கலந்து கொண்டேன். நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்று மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கிறேன் சார். #PhilipJohn வாய்ப்புக்கு நன்றி @sunitha.tati @gurufilms1… இந்த அற்புதமான பயணத்தைத் தொடங்க காத்திருக்க முடியாது!!!” என குறிப்பிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *