அடுத்த 5 நாட்களுக்கு சென்னை புரட்டி போடப்போகும் மழை… தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

அடுத்த 5 நாட்களுக்கு சென்னை புரட்டி போடப்போகும் மழை… தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் நேற்று முதல் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் மழை தொடர்ந்து விடாது பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த ஐந்து தினங்களுக்கு சென்னையில் மழை புரட்டி எடுக்கப்போகிறது என்ற எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கனமழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தகவல் வெளியிட்டது.

அதேசமயம் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நவம்பர் 29ஆம் தேதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு, வடமேற்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *