சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ திரைப்பட அப்டேட் வெளியாகியுள்ளது.
சந்தானம் நடிப்பில் வெளியான ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது. A1 திரைப்பட இயக்குனரான ஜான்சனுடன் இரண்டாவது முறையாக இந்த படத்தில் கை கோர்த்தார் சந்தானம். A1 திரைப்படம் போலவே ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படமும் முழுக்க முழுக்க காமெடியை மையப்படுத்தி உருவானது. இந்நிலையில் சந்தானத்தின் அடுத்த திரைப்படமான ‘டிக்கிலோனா’ பற்றிய புதிய அறிவிப்பை கே.ஜே.ஆர்.ஸ்டியோஸ் வெளியிட்டுள்ளது.
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனைகா, ஷிரின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஹர்பஜன் சிங், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், ஆனந்தராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்களும் இணைந்து நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.
90 களில் சூப்பர் ஹிட்டான ‘மைகேல் மதன காமராஜன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடலை யுவன்சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த பாடலும், ரசிகர்களிடம் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சந்தானம் மூன்று விதமான கெட்டப்களில் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். டைம் டிராவலை மையப்படுத்தி நகைச்சுவை திரைப்படமாக உருவாகியுள்ளது ‘டிக்கிலோனா’ திரைப்படம். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.