Thursday, March 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

வில்லன் டூ வில்லாதி வில்லன் – ‘அம்மாவாசை’ முதல் ‘கட்டப்பா’ வரை நடிகர் சத்யராஜின் மறக்க முடியாத கதாபாத்திரங்கள்

October 4, 2020

‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாற்றியே’ இது நடிகர் சத்யராஜின் ட்ரேட் மார்க் வசனம். 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள சத்யராஜின் மறக்க முடியாத கேரக்டர்களை பற்றி இந்த செய்தியில் காண்போம்.

எம்.ஜி.ஆர் மகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு…!!

விஜய்சேதுபதியுடன் இணையும் சத்யராஜ்?

  1. அமைதிப்படை அமாவாசை:

சத்யராஜின் சினிமா வாழ்க்கையில் தவிர்க்க முடியாத கேரக்டர் அமாவாசை. அரசியல் களத்தை நக்கலும், நையாண்டியுமாக எடுத்துக் கொடுத்திருப்பார் இயக்குனர் மற்றும் நடிகர் மணிவண்ணன்.

சோழர் பரம்பரையில் ஒரு MLA!!!

என்னதான் இயக்குனர் இந்த கேரக்டர் இப்படி வர வேண்டும் என்று யோசித்து எழுதினாலும் இயக்குனர் எதிர்பார்ப்பதை திரையில் காட்டுவது நடிகர்களின் திறமையே! இயக்குனர் மணிவண்ணனின் கற்பனை கதாபாத்திரமான அமாவாசை என்னும் நாகராஜ சோழனை கேமரா முன் வாழ்ந்து காட்டியிருப்பார் சத்யராஜ். தேங்காய் தின்று கொண்டிருக்கும் அமாவாசை ஆகட்டும் ஓட்டு எண்ணிக்கையின் போது கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டிருக்கும் நாகராஜ சோழனாக இருக்கட்டும் அத்தனை காட்சிகளிலும் நக்கல் நையாண்டி நிறைந்து இருக்கும்.

2.வேதம் புதிது ‘பாலு தேவர்‘:

சாதியை வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் மூடர்களுக்கு கன்னத்தில் அறைந்தார் போல் வந்தவர் தான் வேதம் புதிது பாலு தேவர்.

முதல் மரியாதை திரைப்படத்தில் வடிவுக்கரசியின் முன்னாள் காதலனாக நிமிட கதாபாத்திரத்திம் வாய்ப்பு கொடுத்திருப்பார் இயக்குனர் பாரதிராஜா. அதன் பிறகு பாரதிராஜாவின் வேதம் புதிது திரைப்படத்தில் பாலு தேவராக நடித்திருப்பார். ‘பாலு என்பது உங்கள் பெயர் தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா’ என அந்த சிறுவன் கேட்க்கும் கேள்வியில் மொத்த திரைப்படத்தின் பிடிப்பும் இருக்கும்.

3.நண்பன் ‘விருமாண்டி சந்தானம்’

சத்யராஜ் – விஜய் என்னும் புதிய காம்பினேஷனில் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் மிகப்பெரிய பொறியியல் கல்லூரியின் முதல்வர் விருமாண்டி சந்தனமாக நடித்திருப்பார் சத்யராஜ். ‘Life is a race’ என அவர் சொல்லும் வசனம், சிறந்த மாணவனிடம் அவர் எதிர்பார்க்கும் குணம், அதிலிருந்து விலகி நிற்கும் விஜய்யை அவர் கோபத்துடன் அணுகுவது, தன் மகனின் கனவை புரிந்து கொள்ளாமல் விட்டதை எண்ணி வருந்துவது, தன் மகளின் பிரசவத்தை கண் முன்னே பார்த்து துடிப்பது, தன் தவறை உணர்ந்தாலும் விருமாண்டி சந்தானத்திற்கு உரிய மிடுக்குடன் விஜய்யிடம் பேனாவை கொடுப்பது என அத்தனையும் அசத்தல்.

4.வருத்தப்படாத வாலிபர் சங்கம் ‘சிவனாண்டி’

கிராமத்தில் இளசுகளுக்கும் பெருசுகளுக்கும் நடக்கும் மோதல்களை இயல்பாக திரையில் காட்டியிருப்பார்கள் சத்யராஜும் சிவகார்த்திகேயனும். தன்னைச் சுற்றி இருக்கும் அந்த நாலு பேருக்காகவே முறைப்புடன் சுத்தும் சிவனாண்டி கேரக்டர் சத்யராஜ்க்கு. படம் முழுக்க மிடுக்கும் முறைப்பும் என இருக்கும் சத்யராஜ் கடைசியில் உண்மையை உடைக்கும் காட்சியில் அல்டிமேட்.

5.பாகுபலி ‘கட்டப்பா’:

நடிகர் சத்யராஜின் சினிமா பயணத்தில் மிகப்பெரிய மைல்கல் என்றால் அது பாகுபலி திரைப்படம் தான் கட்டப்பா கேரக்டர் மூலம் சத்யராஜை உலகறிய செய்தது.

வழக்கமான சத்யராஜின் நக்கல் நையாண்டி இல்லாமல் மிகவும் சீரியசான கதாபாத்திரம். இந்த வயதிலும் பிரபாஸுக்கும் ராணாவுக்கும் இணையாக சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பார். சத்யராஜ் திரைப்படத்தின் முதல் காட்சியில் நாசர் மற்றும் ராணாவிடம் அவர் பேசும் டயலாக் கட்டப்பாவின் விஸ்வாசத்தைக் காட்டும். அமரேந்திர பாகுபலியை ராஜமாதாவின் ஆணைக்கிணங்க கொன்று விட்டு ரத்தக்கறைகளுடன் ‘தவறு செய்து விட்டாய் சிவகாமி’ என முதன் முதலில் அவர் அரசுக்கு எதிராக பேசுவது பாகுபலியின் மீதான பாசத்தின் உச்சம்.

படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு தான் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. அதற்கு இருந்த ஒரே காரணம் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்விக்கான பதில் தான். இதற்கும் மேலாக கட்டப்பா கதாபாத்திரத்துக்கு வைக்கப்பட்ட மிகப்பெரிய மகுடம் லண்டன் அருங்காட்சியகத்தில் கட்டப்பாவுக்கான மெழுகு சிலை. அந்த அருங்காட்சியில் முதன் முதலில் இடம் பெரும் தமிழனின் மெழுகு சிலை என்றால் இது தான்.

6.நடிகன் ‘ராஜா’:

சத்யராஜின் முழு நீள காமெடி திரைப்படத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கது நடிகன் திரைப்படம். சத்யராஜ் , கவுண்டமணி, மனோரமா என மிகப்பெரிய காமெடி கூட்டணியில் வெளியான திரைப்படம். சத்யராஜ் – கவுண்டமணி கூட்டணியின் காமெடி அசத்தல் என்றால் ஆச்சி மனோரமாவுக்கு சத்யராஜின் மீதான காதல் காட்சிகள் சிரிப்பலைகள்.

7.மிஸ்டர் பாரத் ‘கோபிநாத்’:

மிஸ்டர் பாரத் திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அப்பாவாக, வில்லனாக நடித்திருப்பார். முதன் முதலில் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் டூயட் இடம் பெற்றது இந்த திரைப்படத்தில் தான். மிகவும் சீரியஸாகவும் ஸ்டைலாகவும் இருக்கும் மகன் ரஜினியை சுற்றி நக்கலாக வலம் வரும் சத்யராஜ் அல்டிமேட்.

காக்கி சட்டை ‘விக்கி’:

காக்கி சட்டை திரைப்படத்தில் இவர் கமலுக்கு வில்லனாக நடித்ததை விட அந்த ‘தகடு தகடு’ வசனம் தான் மிகவும் புகழ் பெற்ற ஒன்று.

உயரமான உருவம், வெள்ளை நிறம் என ஹீரோவுக்கு தேவையான அந்த கால தகுதிகளாக கருதப்பட்ட அனைத்தும் இருந்தாலும் இவர் முதன் முதலில் சிறு சிறு வில்லன் வேடங்களில் நடித்தார். பிறகு கடலோர கவிதைகள், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, மந்திர புன்னகை, நடிகன், மாமன் மகள் போன்ற சிறந்த ஹீரோ காதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.

அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். நடிகனாக மட்டுமல்லாமல் தமிழனாக பல மேடைகளில் தமிழுக்காகவும் பேசி இருக்கிறார் நம் புரட்சி தமிழன்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கிருஷ்ண ஜென்மபூமி விவகாரம்: மேல்முறையீடு செய்ய முடிவு

Next Post

அடேங்கப்பா பிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா? ஜிம் முதல் போன் வரை புதிய வசதிகள் !

Next Post
Actor, Politician Kamal Haasan

அடேங்கப்பா பிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா? ஜிம் முதல் போன் வரை புதிய வசதிகள் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version