அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நயன்தாரா உடன் சேர்ந்து மேலும் 2 கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான அட்லீ, தற்போது இந்தி சினிமாவில் படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்த படத்துக்கு லயன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் நயன்தாரா மட்டுமில்லாமல் ப்ரியாமணி மற்றும் இந்தி சினிமா நடிகை சானியா மல்ஹோத்ரா கதாநாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.