சிஎஸ்கே ஜெர்சியில் STR..! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்.!!

சிலம்பரசன் CSK அணியின் மஞ்சள் நிற ஜெர்சியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாநாடு. இத்திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக இத்திரைப்படம் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார் சிலம்பரசன். இந்த படப்பிடிப்பு தமிழக சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து பத்து தல படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில், தற்போது சிம்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சிஐ அணிந்து கொண்டு ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வரும் 19-ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் சிம்பு சிஎஸ்கே ஜெர்சியில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கலக்கி வருகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *