அதிரடி பைக் ஸ்டண்ட் காட்சிகளுடன் உருவாகியுள்ள வலிமை டீசர்.!

அதிரடி பைக் ஸ்டண்ட் காட்சிகளுடன் உருவாகியுள்ள வலிமை டீசர்.!

வலிமை திரைப்படத்தின் டீசர் குறித்த புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் தல அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதிரடி ஆக்சன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை பாலிவுட் நடிகை, காலா திரைப்பட புகழ் ஹீமா குரேஷி நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது வலிமை திரைப்படத்தின் டீசர் ரெடியாகி வருவதாகவும், முற்றிலும் வலிமை ️டீசரில் பைக் ஸ்டண்ட்கள் கலந்து அதிரடியாக இருக்கும் எனவும், டீசருடன் படம் வெளியிட்டு தேதியும் அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *