முடங்கிய தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்!!!காரணம் என்ன?

முடங்கிய தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்!!!காரணம் என்ன?

கடந்த சில ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களை வெளியான அன்றே உடனடியாக இணையதளத்தில் வெளியிட்டு திரைத் துறைக்கு பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி வந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடக்கப்படுவதாக அந்த இணைய தளமே அதிகாரப்பூர்வமாக அறிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதன் காரணமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் முடங்கியது என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக இந்த இணையதளத்தை முடக்க பலவகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அந்தநிறுவனமே இணையதளத்தை முடக்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த முறை நடந்த தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது நடிகர் விஷால் இந்த வலைதளத்தை முடக்குவோம் என்று வாக்குறுதி அளித்து அதன் காரணமாகவே தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அவர் பதவிக்காலம் முழுவதும் இந்த இணையதளத்தின் சேவையை முடக்க பல முயற்சிகள் மேற்கொண்டும் நடிகர் விஷால் அந்த முயற்சிகளில் தோல்வியுற்ற நிலையில், இப்போது அந்த இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *