கொரோனாவால் வந்த விளைவு : கண் பார்வை பாதிக்கப்பட்ட சிறுமி

கொரோனாவால் வந்த விளைவு : கண் பார்வை பாதிக்கப்பட்ட சிறுமி
டெல்லியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவருக்கு கொரோனா பாதிப்பினால் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு அதன் விளைவாக கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
coronavirus

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்),  கொரோனா வைரஸால் பாத்திக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு, மூளை நரம்பில் பாதிப்பைத் ஏற்பட்டு, அதன் காரணமாக சிறுமியின் பார்வை மங்கலாகிவிட்டது எனவும் கூறி உள்ளது.

இதுகுறித்த வரைவு அறிக்கை கூறியதாவது, 11 வயது சிறுமி ஒருவருக்கு, கொரோனா நோய்த் தொற்றால் எற்பட்ட அக்யூட் டெமிலினேட்டிங் நோய்க்குறி (ஏ.டி.எஸ்.) இருப்பதைக் கண்டுபிடித்தோம். இது குழந்தை வயதினரிடையே பதிவான முதல் பக்கவிளைவு என்று கூறியுள்ளது.

இதுப்பற்றி டெல்லி எய்ம்ஸ் குழந்தை நரம்பியல் பிரிவின் தலைவர் டாக்டர் ஷெபாலி குலாட்டி கூறியதாவது, இந்த சிறுமி மருத்துவமனைக்கு வரும்போதே பார்வை குறைபாட்டுடன் எங்களிடம் வந்தார் எனவும், அவருக்கு எடுக்கப்படட எம்.ஆர்.ஐ. சோதனை முடிவில், சிறுமிக்கு ஏ.டி.எஸ் பாதிப்பை கண்டறியப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு புதிய பக்கவிளைவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.டி.எஸ். என்பது,  நரம்புகள் மெய்லின் எனப்படும் பாதுகாப்பு அடுக்குடன் மூடப்பட்டிருக்கும். இது மூளையில் இருந்து வரும் செய்திகளை உடலின் வழியாக விரைவாகவும், சுமுகமாகவும் நகர்த்த உதவுகிறது. மெய்லின் பாதிப்பால் மூளை செயல்களை சேதப்படுத்தும். அதுமட்டுமல்லாமல் பார்வை, தசை இயக்கம், புலன்கள், சிறுநீர்ப்பை மற்றும் குடல் இயக்கம் போன்ற நரம்பியல் செயல்பாடுகளின் வரம்பையும் இது பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *