கொரோனா லாக்டவுனில் வீட்டிலேயே இருந்த தல அஜித் தற்போது குடும்பத்தோடு ஷாப்பிங் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தல அஜித். ஒரே வருடத்தில் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை இயக்குநர் ஹெச் வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். அதே போன்று போனி கபூர் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், திரையரங்குகளும் மூடப்பட்டன. கொரோனா முற்றிலும் சரியான பிறகே வலிமை படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்று தல அஜித் படக்குழுவினருக்கு வேண்டுகோள் வைத்திருந்தார்.
படப்பிடிப்பு இல்லாத நிலையில், கிட்டத்தட்ட 130 நாட்களுக்கும் மேலாக அஜித் வீட்டிலேயே இருந்துள்ளார். அவரை எப்போது பார்ப்போம் என்று தல ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், தற்போது அஜித் தனது மனைவி ஷாலினி மற்றும் குடும்பத்தோடு ஷாப்பிங் செல்வதற்கு காரில் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, அஜித் முகக்கவசமும் அணிந்து கொண்டுள்ளார்.
எப்போதும், அஜித் சமூக அக்கறை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கூட ஹெல்மெட் அணிந்து தான் செல்வார்.
அது படப்பிடிப்பு தளமாக இருந்தாலும் சரி, பைக் ரேஸாக இருந்தாலும் சரி. சட்டத்தை மீறும் எத்தனையோ பேருக்கு மத்தியில் தல அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தல அஜித்தின் வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அஜித்தின் வலிமை படம் வரும் 2021 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்தப் படம் ஒரு பான் இந்திய படமாகவும் உருவாக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் ஹிந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.