“டைரி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

“டைரி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

“டைரி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் “டைரி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குனர் இன்னிசை பாண்டியனின் இயக்கத்தில் அருள்நிதி நடிக்க உள்ளார்.வம்சம், மௌனகுரு, டிமாண்டி காலணி, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற மாறுபட்ட கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து, அதில் வெற்றியும் கண்டு வருபவர் அருள்நிதி. சமீபத்தில் ஜீவாவுடன் இவர் இணைந்து நடித்த ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அருள்நிதியின் அடுத்த திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்துவின் முதல் திரைப்படமான ‘டிமாண்டி காலணி’ யில் நடித்ததை போலவே, அவரின் உதவி இயக்குநர் இன்னிசை பாண்டியனின் முதல் திரைப்படத்திலும் அருள்நிதி நடிக்க உள்ளார்.

அருள்நிதி நடிக்கும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்ற அருள்நிதியின் கெட்டப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *