விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு ரிலீஸ்…!!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு ரிலீஸ்…!!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு ரிலீஸ் படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’புறம்போக்கு என்கின்ற பொதுவுடமை’ படத்தில் இணைந்த எஸ்.பி ஜனநாதன்- விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் லாபம் படத்தில் இணைந்தனர். சமீபத்தில்தான் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இந்நிலையில், பட வெளியீட்டுப் பணிகளில் ஈடுபட்டிருந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

 ’எங்கள் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் படத்தின் அனைத்து பணிகளையுயும் முடித்துக்கொடுத்துவிட்டார். படம் ஏப்ரலில் வெளியாகிறது’ என்று இப்படத்தின் தயாரிப்பாளரான விஜய் சேதுபதி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

Read more : பஞ்சாப் – மும்பை அணிகள் இன்றைய போட்டியில் மோதல்…பஞ்சாப் தோல்வியிலிருந்து மீளுமா…?

‘லாபம்’ ரம்ஜானையொட்டி அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளதோடு இரண்டாவது பாடலான ’Yaamili Yaamiliyaa’ பாடலை தற்போது வெளியிட்டிருக்கிறது படக்குழு. இந்தப் பாடலை எஸ்.பி ஜனநாதனுக்கு சமர்ப்பிதாக விஜய் சேதுபதி அறிவித்திருந்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *