இளையராஜாவின் குரலில் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பாடல் வெளியீடு

இளையராஜாவின் குரலில் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பாடல் வெளியீடு

இளையராஜாவின் குரலில் விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி – சீனுராமசாமி கூட்டணி ’மாமனிதன்’ படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்தினை யுவன்ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இளையராஜவும், யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக இந்தப் படத்திற்கு சேர்ந்து இசையமைக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில், தற்போது ‘தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக் கதவை’ பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். யுவன் ஷங்கராஜா உடன் நிற்க இசைஞானி இளையராஜா பாடும் ’ தட்டிப்புட்டா’  பாடல் மெலடி ரகம். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ படத்தை தயாரித்து வெற்றியும் கண்டார்.

தயாரிப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ”நாங்கள் 7 ஆம் தேதி வெளியிடுகிறோம். அப்பாவிடமிருந்தும் என்னிடமிருந்தும் ஒரு இசை விருந்து காத்திருக்கிறது” என்று பெருமையுடன் கடந்தவாரம் பதிவிட்டிருந்தார்.

இது வீடியோ வடிவில் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் படப்பிடிப்பு தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. விஜய்சேதுபதி, காயத்ரி இடையிலான காட்சிகள் படமாக்குவது போல் காட்சிகள் உள்ளன. இதுவொரு குடும்பக் கதை என்பதை இந்த காட்சிகள் காட்டுகின்றன. இதில் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக விஜய்சேதுபதி நடிக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *