உடல் எடையை வேகமாக குறைக்க இது ஒன்னு பண்ணினா மட்டும் போதும்… குஷ்பு சொன்ன ரகசியம்.!

உடல் எடையை வேகமாக குறைக்க இது ஒன்னு பண்ணினா மட்டும் போதும்… குஷ்பு சொன்ன ரகசியம்.!

தான் உடல் எடையை வேகமாக குறைத்த ரகசியத்தை நடிகை குஷ்பு தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் 80, 90களில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு தான் முதன்முதலில் தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். இப்போது கூட மெதுமெதுவென பளீர் வெள்ளை நிறத்தில் இருக்கும் இட்லி குஷ்பு இட்லி என்றே அழைக்கப்பட்டு வருகிறது. திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் எடையை குறைத்து சில அட்டகாசமான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் அசந்து போகினர். மீண்டும் 90களில் பார்த்த குஷ்பூவை பார்ப்பது போல இருக்கிறது என வர்ணித்தனர்.

அதனை தொடர்ந்து அவ்வப்போது தான் எடுக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் குஷ்பு.

அந்த வீடியோவில், தான் உடல் எடை குறைக்க என்ன செய்துள்ளார் என்பதை பற்றி பேசியுள்ளார். அதில் அவர்” தினமும் நடைப்பயிற்சி செய்வது தான் உடல் எடையை விரைவில் குறைக்க எளிய வழி” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *