பி.எட். படிப்புக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்-உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

பி.எட். படிப்புக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்-உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

பி.எட்.படிப்புக்கு வரும் 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பி.எட். படிப்பு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021ம் கல்வியாண்டிற்கான இளங்கலைக் கல்வியியல் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் வழியாகப் பதிவு செய்யலாம். வரும் 4-12-2020 முதல் 10-12-2020 வரை www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்தப்பட வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ.250 மட்டும் செலுத்தினால் போதுமானது.

இணையதள பதிவேற்றம்
மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும்போது தங்களின் சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்தக் கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளன.
உதவி எண்கள்
இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள் 044-22351014, 044-22351015 மற்றும் 044-28278791 என்ற எண்ணிற்குக் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்புகொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்.
இது தொடர்பாக care@tngasaedu.org மற்றும் tndceoffice@gmail.com என்ற இ-மெயில் முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *