Monday, October 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home கல்வி

மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

Seithialai desk by Seithialai desk
October 4, 2026 11:13 AM GMT+5:30

புதுடெல்லி: தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு உதவித்தொகைத் திட்டத்தின்கீழ், 2026–27 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31-ஆம் தேதி வரை மத்திய கல்வி அமைச்சகம் நீட்டித்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் 8-ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைக் கைவிடாமல், 12-ஆம் வகுப்பு வரை கல்வியைத் தொடர உதவுவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் செய்த செயல்… சமூக வலைதளங்களில் வைரலாகும் காதல் காட்சியால் அதிர்ச்சியில் பெற்றோர்!!

ஆங்கிலம் பேசப் போகும் அரசுப்பள்ளிகள்…

சத்துணவில் வழங்கப்பட்ட முட்டையில் கோழிக்குஞ்சு!

ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம்

இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடி பணப் பரிமாற்ற முறையில் இந்தத் தொகை செலுத்தப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நடத்தும் தேர்வில் தகுதிபெறும் ஒரு லட்சம் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புதிதாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிகளைப் பூர்த்தி செய்தால், 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை உதவித்தொகையைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

யார் தகுதியானவர்கள்?

மாநில அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். விண்ணப்பதாரரின் பெற்றோரது மொத்த ஆண்டு வருமானம் ரூ.3.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகைக்கான தேர்வை எழுத, மாணவர்கள் 7-ஆம் வகுப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் அல்லது அதற்கு இணையான கிரேடு பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு ஐந்து சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்படும்.

மாநில அரசு நடத்தும் உதவித்தொகைத் தேர்வில் ஏற்கெனவே தகுதிபெற்ற புதிய மாணவர்களும், தற்போது உதவித்தொகை பெற்று வரும் மாணவர்களும் விண்ணப்பத்தைப் புதுப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் முதலில் ஒருமுறைப் பதிவு எனப்படும் ‘OTR’ நடைமுறையை நிறைவுசெய்ய வேண்டும். அதன்பிறகு தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு உதவித்தொகைத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.

மாணவர்களின் விண்ணப்பங்களைப் பள்ளி அல்லது கல்வி நிறுவனத்தின் பொறுப்பு அலுவலர் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டும். மாவட்டப் பொறுப்பு அலுவலரின் இரண்டாம் கட்டச் சரிபார்ப்புக்கு நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஏற்கெனவே விண்ணப்பித்த மாணவர்கள், தங்கள் விண்ணப்பம் பள்ளி மற்றும் மாவட்ட அளவில் சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

12-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 2,536 அரசு வேலைகள்!

Next Post

சினிமா பார்க்கவே தனி ‘பட்ஜெட்’ வேண்டுமா?

Next Post

சினிமா பார்க்கவே தனி ‘பட்ஜெட்’ வேண்டுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

மூன்று தங்கம்; இந்திய ஹாக்கியின் சாதனை நாயகன் மன்பிரீத்!

October 4, 2026 6:58 PM GMT+5:30

897 ஓய்வூதியக் குறைகளுக்கு நாளை ஒரே மேடையில் தீர்வு!

October 4, 2026 6:45 PM GMT+5:30

இந்தியக் கருவின் வயதைக் கணிக்கும் AI; 2027–28ல் பயன்பாட்டுக்கு இலக்கு!

October 4, 2026 5:56 PM GMT+5:30

மீண்டும் இயற்கையின் மடியில்; காட்டில் விடப்பட்ட 2 பெருங்கானமயில்கள்!

October 4, 2026 5:47 PM GMT+5:30

‘நான்கே மாதங்களில் ரீல் அறுந்து விட்டதே!’ விஜய்க்கு ஸ்டாலின் 4 கேள்விகள்!

October 4, 2026 5:10 PM GMT+5:30

லூலாவா, போல்சனாரோவா? பிரேசிலில் இன்று பலப்பரீட்சை!

October 4, 2026 2:52 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version