கால்நடை மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!

கால்நடை மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை இன்று முதல் தொடங்கியுள்ளது.

கொரோனா தொற்று பரவலின் காரணமாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளையடுத்து அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்ப விநியோகம் நடைபெற்றுவருகிறது. அதன் வரிசையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக்கல்லூரிகளில் உள்ள கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு எனப்படும், பி.வி.எஸ்சி., – ஏ.ஹெச்., படிப்புகள், உணவு கோழியின் மற்றும் பால்வள தொழில்நுட்ப பட்டப்படிப்புகள் எனப்படும், பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலம் இன்று தொடங்கியது.

பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, இன்று காலை, 10 மணி முதல், www.tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இணையதளம் வாயிலாகவே, செப்டம்பர் 28 மாலை, 6 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவ படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்!

இதோடு வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் அவர்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் வெளிநாட்டு மாணவர்களும், இன்று முதல், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அக்டோபர் 23க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்’ எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *