முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளிவைப்பு : சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஜூன் மாதத்திற்கு தள்ளிவைப்பு : சென்னை உயர் நீதிமன்றம்

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஜூன் மாதத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிராக கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு, 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், விசாரணை ஆணையத்துக்கு தடை கோரியும், சூரப்பா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சூரப்பா தரப்பில், அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், அண்ணா பல்கலைகழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததால், இடஒதுக்கீடு கொள்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தவறான கருத்து காரணமாகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, விசாரணை ஆணையம், அறிக்கை அளித்தாலும், அதன் மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என  இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Read more : மூட நம்பிக்கையால் 6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாய்…கொடூர சம்பவம்…!!

இந்த வழக்கு  நீதிபதி கோவிந்தராஜ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தன்னை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்ற காரணத்திற்காகவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது பணி ஓய்வு பெற்றுவிட்டதால், விசாரணை ஆணையம் செல்லத்தக்கதல்ல என வாதிட்டார். அரசு தரப்பில், தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை மற்றொரு தேதிக்கு தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

நீதிபதி கலையரசன் ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாலும், அதன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை கூடாது என இடைக்கால உத்தரவு உள்ளதாலும் வழக்கை ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி கோவிந்தராஜ், இடைக்கால உத்தரவை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து, வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *