Wednesday, March 25, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home கல்வி

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் கட்டணம் வசூலிக்க முடியாது – கட்டண நிர்ணய குழு அதிரடி!

July 23, 2020

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய முடியாது என்று கட்டண நிர்ணயக் குழு தெரிவித்துள்ளது. இதனால் பெரும்பாலான பள்ளிகள் கட்டணம் நிர்ணயம் செய்ய முடியாமலும் பல பள்ளிகள் திறக்க முடியாமலும் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 10 ஆயிரம் நர்சரி பள்ளிகள், 4,500 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள் 2,800 பள்ளிகள் இயங்கி வருகின்றன. கடந்த 2010ம் ஆண்டு மேற்கண்ட தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த கட்டண நிர்ணய குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவின் மூலம் ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒரு முறை தனியார் பள்ளிகளுக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை தான் பெற்றோரிடம் வசூலிக்க வேண்டும் என்றும் கட்டண நிர்ணய குழு தெரிவித்துள்ளது.

அசுர வளர்ச்சியில் அரசுப் பள்ளிகள்

தர்மபுரி : 5 மாணவர்கள் இடைநீக்கம்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை?

இந்நிலையில், தமிழகத்தில் இயங்கி வரும் மேற்கண்ட தனியார் பள்ளிகளில் 90 சதவீத பள்ளிகளுக்கான அங்கீகாரத்தின் அவகாசம் 2020 மே 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. ஆண்டுக்கு ஒரு முறை இந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பித்து மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் வழங்கி வருகிறது.

கடந்த ஆண்டு வரை இந்த புதுப்பிக்கும் அங்கீகாரங்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேரடியாக பள்ளிகளின் நிர்வாகிகளிடம் வழங்கி வந்தார். ஆனால், வரும் 2020-2021ம் கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் புதுப்பித்து வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார். இடையில் கொரோனா பாதிப்பு வந்ததால் இந்த பணி தேக்கம் அடைந்துவிட்டது.

இதற்கிடையே, ஆண்டுக்கு ஒரு முறை அங்கீகாரத்தை புதுப்பித்து வழங்குவதற்கு பதிலாக 3 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பித்து வழங்க வேண்டும் என்று கேட்டு தனியார் பள்ளிகள் சங்கங்கள் சார்பில் போராட்டம், உண்ணாவிரதம் என்று பலகட்ட போராட்டங்களை நடத்திவிட்டனர். ஆனால், இதற்கு அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இது ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் 20 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 700க்கும் மேற்பட்ட பள்ளிகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்து மத்திய பாடத்திட்டத்துக்கு மாறுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. அவையும் மாநில அரசிடம் என்ஓசி கேட்டு காத்திருப்பதாக தெரிகிறது.

இருப்பினும் மேற்கண்ட 20 ஆயிரம் பள்ளிகளில் 90 சதவீத பள்ளிகளின் அங்கீகாரம் கடந்த மே 31ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. தற்போது அவற்றின் அங்கீகாரம் புதுப்பித்தால் தான் அடுத்த கல்வி ஆண்டில் அந்த பள்ளிகள் இயங்க முடியும். கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது அங்கீகாரம் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், கட்டண கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன், 26ம் தேதி வரை தனியார் பள்ளிகளுக்கு கெடு வைத்துள்ளார்.

மேலும், தனியார் பள்ளிகள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ள விண்ணப்பிக்கும் போது இணைத்து அனுப்ப வேண்டிய சான்றுகளின் பட்டியல்களை வெளியிட்டுள்ளது. அதில் பள்ளிக்கான அங்கீகார சான்றும் ஒன்று. தற்போது மே மாதத்துடன் பெரும்பாலான பள்ளிகளின் அங்கீகாரத்துக்கான அவகாசம் முடிந்துள்ளதால், அந்த பள்ளிகள் எப்படி விண்ணப்பிப்பார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, 3 ஆண்டுக்கு அங்கீகாரத்தை புதுப்பித்து தர வேண்டும் என்று தனியார் பள்ளிகள் வைத்த கோரிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில், ஒன்றரை ஆண்டுக்கு அங்கீகாரம் புதுப்பித்து தருகிறோம் என்று அமைச்சர் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, வரும் ஜூலை 26ம் தேதிக்குள் அங்கீகாரம் புதுப்பித்து தர வேண்டும்  அல்லது விண்ணப்பிக்கும் தேதியை இன்னும் நீட்டிக்க வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் எதிர்பார்க்கின்றன. இது குறித்து கட்டண குழு என்ன முடிவு எடுக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

கார்களில் இனி ஸ்பேர் டயர் கட்டாயம் இல்லை – என்ன காரணம் தெரியுமா?

Next Post

அக்டோபரில் கொரோனா தடுப்பூசி

Next Post

அக்டோபரில் கொரோனா தடுப்பூசி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version