Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

100 கோடி தடுப்பூசி:  பிரதமர் மோடி பெருமிதம்

October 21, 2021

100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முககவசம் கட்டாயமா?

அதிகரிக்கும் கொரோனா – மீண்டும் ஒட்டப்படும் நோட்டீஸ்

5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்தியா உட்பட பல நாடுகளை ஆட்டிபடைத்த கொரோனா தொற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளது. எந்தளவுக்கு தடுப்பூசி செலுத்துகிறமோ, அந்தளவு கொரோனாவின் மூன்றாவது அலையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

ஜனவரி மாதமே இந்தியாவில் தடுப்பூசி  செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டாலும் மக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி செலுத்திக் கொள்வோர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது.

ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கு ஏற்ற யுக்தியை பயன்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அதில் வெற்றியும் கண்டன. அந்த வகையில், தமிழ்நாட்டில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி மூலம் அதிகளவிலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 9 மாதங்களில்(278 நாட்களில்) 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே சீனா முதல் நாடாக 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ள நிலையில், இந்தியா 100 கோடி தடுப்பூசியை செலுத்தி இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. காலை 7.30 மணி நிலவரப்படி 99.85 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்த நிலையில், காலை 10 மணி நிலவரப்படி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,04,80,500ஐ கடந்துள்ளது. இந்த தகவல் கோவின் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, நிதி ஆயோக் சுகாதாரத் துறை உறுப்பினர் வி.கே.பால் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில், “100 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா வரலாறு படைத்திருக்கிறது.

இந்தியாவின் அறிவியல், தொழில் மற்றும் 130 கோடி இந்திய மக்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை நாம் கண்கூடாக காண்கிறோம். வாழ்த்துகள் இந்தியா. 100 கோடி தடுப்பூசி செலுத்திவிட்டோம். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இந்த சாதனையை அடைய காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் இதுவரை, 70,83,88,485 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 29,18,32,226 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இதில் 18-44 வயதிற்கு உட்பட்டோர் 46,46,62,265 பேர், 45 வயதிற்கு மேற்பட்டோர் 30,36,43,267 பேர். அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 12,21,60,335 பேரும், தமிழ்நாட்டில் 5,39,60,165 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது, #VaccineCentury என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

வெள்ளத்தில் தத்தளிக்கும் உத்தரகாண்ட்… நம்பிக்கை கொடுத்த அமித் ஷா!

Next Post

சுவையைக் கூட்ட ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கோவையில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

Next Post

சுவையைக் கூட்ட ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கோவையில் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026

Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?

September 11, 2026

நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?

September 11, 2026

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!

September 11, 2026

நாளுக்கு 125 கப்பல்கள் சென்ற ஹார்முஸ்… இப்போது வெறும் 7! உலக எண்ணெய் விநியோகத்தின் முக்கிய பாதையில் என்ன நடக்கிறது?

September 11, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version