
பிரபல நடிகையும், நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரோஜா ஆந்திராவில் அமைச்சராக பதவியேற்கவுள்ளார். இதையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆந்திர அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறி இருந்தார். அதன்படி அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய அமைச்சர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள அமைச்சரவையில் நடிகை ரோஜா இடம்பெறுகிறார். நகரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருக்கும் ரோஜா, அமைச்சராகும் அறிவிப்பு வெளியானவுடன் அவருடைய ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இன்று நடைபெறும் நிகழ்வில் காலை 11.30 மணியளவில் நடிகை ரோஜா அமைச்சராக பதவியேற்கிறார். அவருக்கு என்ன துறை ஒதுக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு ஆந்திரா மட்டுமில்லாமல் தமிழ்நாடு அரசியல் களத்திலும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






