கருப்பு உடை போராட்டம்!

கருப்பு உடை போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் திமுக மற்றும் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அமைச்சர் தர்மேந்திர பிரதான்

இந்நிலையில் வரம்பற்று பேசிய தர்மேந்திர பிரதானை கண்டித்து மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் கனிமொழி, ஆ.ராசா, வைகோ, திருமாவளவன், திருச்சி சிவா உள்ளிட்ட பலரும் இப்ப போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *