Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

நினைவலையில் தழுதழுத்த மாநிலங்களவை..பிரியா விடை பெற்ற 11 எம்.பி.க்கள்..

September 23, 2020
மாநிலங்களவையிலி்ருந்து வரும் நவம்பர் மாதம் 11 எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், அவைத்தலைவர் வெங்கைய நாயுடு அவர்களுக்கு பிரியா விடை அளித்தார். 

நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்றுடன் அவை முடிவுறும் நிலையில், நவம்பர் மாதம் ஓய்வு பெறும் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 11 எம்.பி.க்களுக்கு இன்று பிரியா விடை அளிக்கப்பட்டது. ஓய்வு பெறும் எம்.பி.க்களில் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்திப்சிங் பூரி, சமாஜ்வாதிக் கட்சி எம்.பி. ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. வீர் சிங், காங்கிரஸ் கட்சி எம்.பி. ராஜ் பப்பார் ஆகியோருடன், சமாஜ்வாதிக் கட்சியின் எம்.பி.க்கள் ஜாவித் அலி கான், ரவி பிரகாஷ் வர்மா, சந்தர்பால் சிங் யாதவ், காங்கிரஸின் பி.எல்.பூனியா, பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. ராஜாராம், பாஜகவின் நீரஜ் சேகர், அருண் சிங் ஆகியோர் அடங்குவர்.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்

12 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறமுடியாது- வெங்கைய்ய நாயுடு திட்டவட்டம்!!

“ஆயுஸ்மான் பாரத்” திட்டத்தால் மருத்துவத்துறையில் புரட்சி நடக்கும்- வெங்கையா நாயுடு நம்பிக்கை

இதுதொடர்பாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், “நவம்பரில் அவையிலிருந்து 11 எம்.பி.க்கள் விடை பெறுகின்றனர். அவர்கள் பலர் மீண்டும் அவைக்குத் திரும்பத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஓய்வு பெறும் எம்.பி.க்கள் விருப்பப்பட்டால் பேசலாம்” எனத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் அவையை புறக்கணித்துள்ள நிலையில், சமாஜ்வாதிக் கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்த எம்.பி. நீரஜ் சேகர் பேசுகையில், “நல்வாய்ப்பாக முதலில் மக்களவைக்கும் பின்னர் மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் குழந்தையாக இருந்தபோது என்னுடைய தந்தையும், முன்னாள் பிரதமருமான சந்திரசேகருடன் அவைக்கு வந்துள்ளேன். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் ஓடி விளையாடியிருக்கிறேன். அப்போது இந்த அளவுக்குக் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. இப்போது நான் எம்.பி.யாக இங்கு வந்திருக்கிறேன். நான் அனைவரையும் பிரியநேர்கையில் வருத்தமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டார்.

மாநிலங்களவை இன்றுடன் முடிகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கூட்டத்தொடரை அக்டோபர் 1-ம் தேதிவரை 18 நாட்கள் தொடர்ந்து நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.

ஆனால், கரோனாவில் அடுத்தடுத்து பல எம்.பி.க்கள் பாதிக்கப்பட்டதால், அவர்களின் பாதுகாப்புக் கருதி கூட்டத்தொடரைப் பாதியிலேயே முடித்துக் கொண்டது.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

ஐபிஎல்: மும்பை vs கொல்கத்தா..முழுமையான இரு அணிகள்..பறக்க போகும் பந்துகள்..

Next Post

ஆண் தேவதை

Next Post

ஆண் தேவதை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

சென்னைக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம்; கண்டலேறில் குறைந்த நீர் இருப்பு – குடிநீருக்கு பாதிப்பு வருமா?

September 15, 2026

இன்று முதல் DL, RC ஸ்மார்ட் கார்டு இல்லை! தமிழகத்தில் புதிய டிஜிட்டல் நடைமுறை – எப்படி பெறுவது?

September 15, 2026

நாளையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு; இன்று திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் – களமிறங்கும் கம்யூனிஸ்டுகள்

September 15, 2026

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version