ஆடுகளுக்கும் மாஸ்க் போடணுமா???என்னடா கொடுமையா இருக்கு!

ஆடுகளுக்கும் மாஸ்க் போடணுமா???என்னடா கொடுமையா இருக்கு!
உத்தரபிரதேசத்தில் ஆடுகளுக்கும் மாஸ்க் போடவேண்டும் என்று ஆடு மேய்ப்பவரைக் காவல்துறையினர் மிரட்டி அனுப்பியுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவர் மும்மரமாக தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளின் வாகனத்தைப் பார்த்தவுடன் அத்தொழிலாளி தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறார். மாஸ்க் அணியவில்லை என்ற அச்சத்தால் போலீஸாரைப் பார்த்தவுடன் தொழிலாளி இப்படி செய்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட போலீஸார் ஆடுகளை தூக்கிக் கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று இருக்கின்றனர். தனது ஆடுகளைத் திருப்பிக் கொடுக்குமாறு காவல் நிலையத்திற்குச் சென்று தொழிலாளி கேட்டு இருக்கிறார்.

அப்போது நீ ஏன் மாஸ்க் அணியாமல் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாய், உனக்கு மட்டுமல்ல இனிமேல் ஆடுகளுக்கும் மாஸ்க் போட்டுத்தான் வெளியே அழைத்து வரவேண்டும் என அச்சுறுத்தி இருக்கின்றனர். இதைக்கேட்ட தொழிலாளி அதிர்ந்து போயிருக்கிறார். இதுகுறித்த வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *