செப்.22ம் தேதி முதல் மதுரையில் இருந்து ஹரித்துவாருக்கு புதிய ரயில்

செப்.22ம் தேதி முதல் மதுரையில் இருந்து ஹரித்துவாருக்கு புதிய ரயில்

‘பாரத் கவுரவ்’ திட்டத்தின் கீழ் மதுரையில் இருந்து ஹரித்துவாருக்கு வரும் 22ம் தேதி தனியார் ரயில் இயக்கப்படவுள்ளது.

Two Bharat Gaurav trains operated so far: Union Minister Ashwini Vaishnaw  informs Lok Sabha |

இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை மக்கள் கண்டுகளிக்கும் வகையில் ‘பாரத் கவுரவ்’ என்ற திட்டத்தை இந்திய ரயில்வே கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் முதல் ரயில்சேவை, கோவைக்கும் ஷீரடிக்கும் இடையே இயக்கப்பட்டது. இரண்டாவது தனியார் ரயில் சேவை மதுரையில் இருந்து வாரணாசிக்கு இயக்கப்பட்டது. இந்த நிலையில் ‘பாரத் கவுரவ்’ திட்டத்தின் கீழ் மதுரையில் இருந்து ஹரித்துவாருக்கு வரும் 22ம் தேதி தனியார் ரயில் இயக்கப்படவுள்ளது.

இந்த தனியார் ரயில் செப்டம்பர் 29ம் தேதி ஹரித்துவாரை சென்றடையும். பின்னர்,செப்டம்பர் 30ம் தேதி புறப்பட்டு, அக்டோபர் 3ம் தேதி மதுரையை வந்தடையும். இது கயா, வாரணாசி வழியாக இயக்கப்படுகிறது. டிராவல் டைம்ஸ் என்ற தனியார் நிறுவனம் இந்த ரயிலை இயக்கவுள்ளது. இதில் பயணம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் https://www.ularail.com/  என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *