400 பெண்களுடன் உல்லாசம் இயக்குநர் கைது

400 பெண்களுடன் உல்லாசம் இயக்குநர் கைது

சேலத்தில் ஆபாச படம் எடுத்த வழக்கில் இயக்குநரை போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன் பாளையத்தை சேர்ந்தவர் வேல்சத்ரியன் (38).சினிமா இயக்குநரான இவர், இளம்பெண்ணை நடிகை ஆக்குவதாக கூறி அவர்களை ஆபாச படம் எடுத்த  புகாரில் சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரின் பெண் உதவியாளரான ஜெயஜோதியையும் போலீசார் கைது செய்தனர்.

ஜெயஜோதியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, கைது செய்யப்பட்ட இயக்குநர் வேல்சத்ரியன் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஏராளமான பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி ஆபாச படம் எடுத்து வந்துள்ளார். மேலும், 400க்கும் மேற்பட்ட பெண்களிடம் பணம் வசூலித்து ஏமாற்றி வந்ததும், உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. முதல்நாள் அவரிடம் நடத்தப்பட்ட அனைத்து விசாரணையையும் போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர்.

சினிமா வாய்ப்பு கேட்டு வந்த பெண்களுடன் இயக்குனர் உல்லாசம்

இயக்குநர் வேல்சத்ரியனின் ஸ்டூடியோவில் இருந்து கைப்பற்றப்பட்ட ஹார்டு டிஸ்க், மடிக்கணினி, பென்டிரைவ் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையே வேல்சத்ரியனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார். இயக்குநர் அலுவலகத்தில் மேலும், சில பெண்களும், உதவியாளர்களும் பணிபுரிந்து வந்துள்ளனர். அந்த வகையில், கேமராமேன், 2 பெண் உதவியாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *