ஓணம் ஸ்பெஷல்: பிரட் வடை

ஓணம் ஸ்பெஷல்: பிரட் வடை

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு 2

பிரட் துண்டுகள் 10

வறுத்த ரவை 1/2கப்

அரிசிமாவு 2 டேபிள் ஸ்பூன்

கேரட் துருவல்

கொத்தமல்லி

இஞ்சி

வெங்காயம்

பச்சை மிளகாய்

கறிவேப்பிலை

உப்பு (தேவையான அளவு)

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.

பிரட்டை ஒரு பாத்திரத்தில் உதிர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் வறுத்த ரவா, அரிசி மாவு, உப்பு, கேரட் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, சேர்த்து வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்றாக கெட்டியாக  பிசைந்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாகி வந்ததும் வடையாக தட்டி பொரித்து எடுத்தால் சுவையான பிரட் வடை ரெடி.

இதற்கு தேங்காய் சட்னி, சாஸ் அல்லது மல்லி சட்னி தொட்டு சாப்பிட்டால் சுவை பிரமாதமாக இருக்கும்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *