குஜராத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியது : 13 பேர் பலி, 6 பேர் படுகாயம்

குஜராத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியது : 13 பேர் பலி, 6 பேர் படுகாயம்

குஜராத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சூரத்:

குஜராத் மாநிலம் சூரத் அருகே கோசம்பா என்ற இடத்தில் கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடும் போது சரக்கு லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடைபாதை அருகில் தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது ஏறியது.

Read more – உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மெஷின் பிஸ்டல் ‘அஸ்மி’ விரைவில் இந்திய ராணுவத்தில் சேர்ப்பு : 4 மாதத்தில் தயாரித்து இந்திய விஞ்ஞானிகள் புதிய சாதனை

இந்த சரக்கு லாரி ஏறியதில் 13 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், 6 பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த அனைவரும் ராஜஸ்தானில் இருந்து நாள் கூலிக்காக வந்தவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, கோசம்பா பகுதி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அடுக்கட்ட விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *