மத்திய பிரதேஷத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மணமகனை பிபிஇ பாதுகாப்பு உடையணிந்து மணப்பெண் திருமணம் செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மத்திய பிரதேஷம் ரட்லம் நகரை சேர்ந்த ஜோடிகளுக்கு சமீபத்தில் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண தேதியும் குறிக்கப்பட்டது. இந்தநிலையில், திடீரென யாரும் எதிர்பார்க்காத வேளையில் மணமகனுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Read more – வீட்டின் உட்புறத்திலும் முகக்கவசம் அணிய நேரம் வந்துவிட்டது : மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
அதனை தொடர்ந்து முகூர்த்த தினத்தை கைவிடாத மனமில்லாத இரு குடும்பத்தின் பெற்றோர்கள் ஜோடிகளுக்கு கொரோனா பாதுகாப்பு உடையணிந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். மேலும், பாதுகாப்பு உடையணிந்து திருமணம் முடிந்த கையோடு அக்னியை சுற்றி வலம் வந்துள்ளனர்.






